வாழைப்பழம் நமக்கு ஜோக்காக மட்டுமே இருந்து வருகிறது. அதைப் பற்றிய சில உண்மைகள். உலகளவில் 100 பில்லியன் வாழைப்பழங்கள் வருடந்தோறும் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒரு பில்லியன் என்பது 100 கோடி, அதாவது 10000 கோடி வாழைப்பழங்கள். பார்த்து வழுக்கி விடுந்து விடாதீர்கள். அதாவது கோதுமை, அரிசி, கார்ன் ஆகியவைகளுக்கு அடுத்ததாக உற்பத்தி மற்றும் உபயோகத்தில் இருக்கிறது. இந்தியாவிலும் அதிக அளவு வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறடு, ஆனால் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் கவன்டிஸ என்ற வகை வாழைப்பழங்களை இந்தியாவில் அதிகம் நாம் உற்பத்தி செய்வதில்லை என்பது தான்.
முடியும் ஏற்றுமதியாகிறது
இந்தியாவில் தலைமுடிகளை அதிகம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஆந்திராவில் எலுருவில் உள்ள சீனிவாசா ஹேர் இண்டஸ்டீரிஸ் என்ற கம்பெனி தான் வருகிறது. சரி, எதற்காக வெளிநாடுகளில் முடிகளை வாங்குகிறார்கள். விக்குகள் தயாரிக்க, மேலும் தலைமுடியிலிருந்து ஒருவித அமிலம் கிடைக்கிறது அதை தயாரிக்கவும் இறக்குமதி
இந்த வார ஏற்றுமதி இணையதளம்
இந்தியாவின் வளர்ச்சியில் எஸ்.எம்.ஈ. கம்பெனிகள் பெரும் பங்காற்றுகின்றன. இவர்களுக்கு உதவும் விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது தான் மேலே கண்ட இணையதளம். 500,000 பிசினஸ லிஸ்டிங்களுக்கு மேல் உள்ளது. மேலும், டெண்டர்கள், பி2பி கம்யூனிட்டி, பிசினஸ ஆர்ட்டிகல்ஸ், உங்கள் கேள்விகளுக்கு பதில் என்று அவர்களின் சேவை நீண்டு கொண்டே போகிறது. 600 டிராப்ட் அக்ரிமெண்ட்கள் வேறு . இந்த இணையதளத்தை தமிழிலும் மாற்றி படிக்கலாம். வேறு என்ன வேண்டும் உங்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய? இன்றே செல்லுங்கள் இந்த இணையதளத்திற்கு, பயன் பெறுங்கள்.
தேங்காயும் ஏற்றுமதி ஆகிறது
தமிழ்நாட்டில் தேங்காய் முக்கிய இடம் பிடிப்பது பொள்ளாச்சி அதன் சுற்றுப்புறங்கள் தாம். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் லட்சக்கணக்கான தேங்காய்கள் செல்கின்றன. சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, ஜலகண்டபுரம், தாரமங்கலம், வனவாசி ஆகிய இடங்களிலும் தேங்காய் மொத்த வியாபாரம் படு ஜோராக நடக்கிறது.
பிராஸ் பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?
பதில்
குஜராத்தில் உள்ள ஜாம்நகர் என்ற ஊரில் 5000 சிறிய, பெரிய பிராஸ் கம்பெனிகள் இருக்கிறது. எல்லா வகையான பிராஸ் பொருட்களையும் மொத்தமாக வாங்க சிறந்த இடம்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி கண்காட்சிகள்
ஆயத்த ஆடைகளுக்கு முக்கியமான மார்க்கெட் அமெரிக்காவும், ஐரோப்பாவும் தான். இவை தற்போது பொலிவிழந்து காணப்படுவதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனம், கொலம்பியா, பனாமா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இ.சி.சி.ஜி. ஏற்றுமதி ஸ்கோர் கார்டு
இ.சி.சி.ஜி. அதாவது எக்ஸ்போர்ட் கிரிடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் நமது ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் விதமாக வெளிநாட்டில் இருந்து நம் நாட்டவர்களிடம் சரக்குகளை இறக்குமதி செய்யும் 90,000 ஆக்டிவ் இறக்குமதியாளர்களை பற்றிய ரேட்டிங் பற்றிய தகவல்களை வைக்க ஸ்கோர் கார்ட் தயார் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி பற்றி நினைப்பவர்கள் இ.சி.சி.ஜி. பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது, இது முக்கியம்.
கடந்த வருடம் இந்த நிறுவனம் 713 கோடி ரூபாய்களை கியாரண்டி பணமாக கொடுத்துள்ளது. அதிகம் க்ளயம் வரும் செக்டார்கள் அக்ரிகல்ச்சர், ஜுவல்லரி, ரெடிமேட் கார்மெண்ட்ஸ், காட்டன், எஞ்சினியரிங் சாமான்கள். அதிகம் க்ளயம் வரும் நாடுகள் அமெரிக்கா, யு.கே., யு.ஏ.ஈ., ஜெர்மனி மற்றும் இத்தாலி.
கேள்வி
இந்தியாவில் கார்பெட் உல் எங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது? தமிழ்நாடு எங்கு இருக்கிறது?
பதில்
அதிகமாக ராஜஸ்தானிலும், அடுத்ததாக ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரா, குஜராத் ஆகியவை வருகின்றன. தமிழ்நாடு கடைசியில் தான் இருக்கிறது. இது தவிர கார்பெட்டுக்கான உல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.
பழங்கள், காய்கறிகளை பிரஷ்ஷாக வைக்க, பாக்கேஜிங்
வெளிநாடுகளில் பழங்கள், காய்கறிகளை பாக்கேஜிங் செய்து டிஸ்பிளேயில் வைத்துள்ளதை பார்க்கும் போதே வாங்கவேண்டும் என்று தோன்றும். அது போல எப்படி பாக்கேஜிங் செய்வது என்று பலரும் பல சமயத்தில் யோசித்திருக்கலாம்.(STEPAC)என்ற இணையதளத்தை சென்று பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியமான பல தகவல்கள் கிடைக்கும்.
பப்பாளி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?
ஒரு காலத்தில் வீடுகளில் கிணற்றடியில் வைக்கப்படும் செடியாக இருந்தது பப்பாளி. தற்போது மக்களின் அன்றாட உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி சாகுபடியை முழுநேரத் தொழிலாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தியாவில் தற்போது செய்து வருகின்றனர். 2006-07 வருடத்தில் இந்தியாவில் 2,482,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அது 2010-11ம் ஆண்டில் 4,196,000 டன்களாக உயர்ந்திருக்கிறது. அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் குஜராத், அடுத்து ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகியவை ஆகும். தமிழ்நாட்டின் பங்கு இந்தியாவின் உற்பத்தியில் 2.5 சதவீதம் தான். ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால் பதில் அதிகம் இல்லை என்பது தான். ஏனெனில் பெருமளவில் உள்நாட்டிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது.
பழங்களில் இருந்து ஸ்நாக்ஸ்
கேட்கவே இனிப்பாக இருக்கிறதா? ஆமாம். இதுவரை சிப்ஸ் போன்றவைகளை சாப்பிட்டு வேறு ஸ்நாக் வரவே வராதா? என்று நினைப்பவர்களுக்காகவே டெல் மாண்டே கம்பெனி பழங்களில் தயாரிக்கப்பட்ட ஸ்நாக் வகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவ்து பப்பாளிப்பழம், மாம்பழம், அப்ரிகாட் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்நாக் இனிமேல் உங்கள் அருகில் உள்ள வால்மார்ட்டில் கிடைக்கும். என்ன வால்மார்ட் என்கிறீர்களா? அதுதான் மத்திய அரசாங்கம் சில்லறை விற்பனையில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விட்டதே? ஏன் இந்திய இளைஞர்களும் இது போன்று சிந்தித்து பழங்களில் இருந்து ஸ்நாக்ஸ தயாரிக்க, விற்பனை செய்ய, ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யக்கூடாது?
ஏற்றுமதியில் விவசாயம்
ஏற்றுமதி இறக்குமதி
இன்றைய இளைஞர்கள் பலர் விவசாயம் என்றாலே காத தூரம் ஓடி விடுகின்றனர். தந்தை விவசாயத்தில் இருந்தாலும் மகன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்களும், அப்பா ஈடுபட்டாலும் தான் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் மகன்களும் பெருகிவரும் காலம். ஏன் அக்ரிகல்ச்சர் படித்த மாணவர்களே வொயிட் காலர் வேலைக்குத் தான் செல்ல நினைக்கிறார்கள். ஆனால் சென்ற வருடம் இந்தியாவின் ஜி.டி.பி. யில் அக்ரிகல்ச்சர் தான் 14.5 சதவீதம் பங்களித்துள்ளது. மேலும், இந்தியாவின் ஏற்றுமதியில் அக்ரிகல்ச்சர் 10.5 சதவீதம் பங்களித்துள்ளது.
இந்தியா அதிக அளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும், தண்ணீரையும் அக்ரிகல்ச்சருக்காக செலவழிக்கிறது எனவும், இதை செலவழிக்காமல் நமது நாட்டிற்கு தேவையானவைகளை அதாவது உற்பத்திக்கு மேல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும், இதனால் மிச்சப்படும் விளைநிலங்களை தொழிற்சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படி இருக்குங்க?
இந்த இணையதளம் மூலமாக பல நாடுகளின் பி2பி இணையதளங்களுக்கு செல்லும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். ஏற்றுமதிக்கு முக்கியமானது இறக்குமதியாளர்களே. ஒவ்வொரு நாட்டிற்கும் பி2பி இணையதளங்களை அமைத்து இதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். மேலும், உணவுப் பொருட்கள் சம்பந்தமாகஎன்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார்கள். சென்று பாருங்கள், நல்ல இணையதளங்கள்.
மாம்பழத்திற்கு இஸ்ரேல் தொழில்நுட்பம்
விவசாயத்தில் இஸ்ரேலின் தொழில்நுட்பம் உலகறிந்தது. குஜராத் அரசாங்த்திற்கு இஸ்ரேல் மாம்பழத் தொழில்நுட்பத்தை அளிக்கவுள்ளது. குஜராத்தில் உள்ள கிர் என்ற ஊரில் ஒரு ஹார்டிக்கல்ச்சர் சென்டர் தொடங்கவும், மாம்பழம் பயிரிட சிறந்த தொழில்நுட்பங்களையும் அளிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது போன்று வாழைப்பழம் சாகுபடி சம்பந்தமாகவும் ஒரு ஒப்பந்தம் ஏற்படவுள்ளது. மாம்பழமும், வாழைப்பழமும் தமிழ்நாட்டிலும் சிறப்பாக விளையும் பொருட்கள். மேலும், தேசிய வாழை ஆராயச்சி மையைமும் திருச்சியில் தான் உள்ளது. ஆதலால் தமிழ்நாடும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் விவசாயிகளுக்கு நன்மை தரும். ஏற்றுமதி இறக்குமதி
சுவிட்சர்லாந்து சூப்பர் மார்க்கெட்டிற்கு இந்திய பொருட்கள்
சுவிட்சர்லாந்தில் உள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்களில் ஒன்றாகும் மிக்ரோஸ. இதுவரை இடைத்தரகர்கள் மூலமாக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இந்தக் கம்பெனி, இந்தியாவிலிருந்து வாங்குவதை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் புதுடெல்லியில் ஒரு சோர்சிங்கிற்காக ஒரு கம்பெனியை தொடங்கி உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க முடிவு செய்துள்ளது. விற்பதற்கு ரெடியாகுங்கள். இந்த சூப்பர் மார்க்கெட் இதற்கு முன்னமே சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நேரடி கொள்முதல் நிலையங்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
உங்கள் ஐடியாக்களுக்கு வடிவம் கொடுக்கும், செயல்படுத்த பணம் கொடுக்கும் இணையதளம்
உங்களிடம் நல்ல ஜடியாக்கள் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த நிறைய பணம் தேவைப்படும் என்ற பட்சத்தில் உங்கள் ஐடியாக்களை இந்த இணையதளத்திற்கு தெரிவித்தால் உங்களுக்கு உதவி செய்ய பலர் காத்திருக்கிறார்கள். இதுவரை 20,000 ஐடியாக்களுக்கு வடிவம் கொடுத்துள்ளார்கள். இதன் மதிப்பு 1000 கோடி ரூபாய்களுக்கு மேலே இருக்கும். சென்று பாருங்கள் உங்கள் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் இணையதளமாக இது இருக்கலாம். உங்களது ஐடியாக்களுக்கு ஒரு வழி கிடைக்க வாழ்த்துக்கள்.
வீவ்ஸ் ஆப் இந்தியா
இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் என்ன வகையான் டிரஸ் மெட்டீரியல்கள், சாரீஸ் தயாரிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும்.
பீகார்
பகல்பூர் சில்க் டிரஸ் மெட்டீரியல், துசார் மற்றும் மட்கா சில்க் சாரிகள்
ராஜஸ்தான்
பந்தானி சில்க் சாரிகள், ஜல்புரி குர்த்தீஸ், ஹாண்ட் ப்ளாக் பிரிண்ட், ப்ளாக் பிரிண்ட் டிரஸ மெட்டீரியல்
உத்திரபிரதேஷ்
பனாரஸ் சில்க் சாரிகள், ஜாம்வர் சில்க சாரிகள், புராகெட் டிரஸ் மெட்டீரியல்
கர்நாடகா
பெங்களூர் சில்க், மைசூர் சில்க், ஹுப்ளி காட்டன் மற்றும் சில்க் சாரிகள்
தமிழ்நாடு
காஞ்சிபுரம் சில்க் சாரிகள், திருப்புவனம் சில்க் சாரிகள்
மேற்கு வங்காளம்
சாந்தி நிகேதன் காந்தா சில்க் சாரிகள், பாஸ்மினா சாரிகள், நிம்சாரி சாரிகள், பிரிண்டட் சில்க் சாரிகள்
ஆந்திரா
கலம்காரி சாரிகள், மங்கள்கிரி, போச்சம்பள்ளி சில்க் சாரிகள், தர்மாவரம் சில்க் சாரிகள்
மத்திய பிரதேஷ்
சந்தாரி மற்றும் மகேஷ்வரி காட்டன் மற்றும் சில்க் சாரிகள்
ஜம்மு காஷ்மீர்
தாபி சில்க் சாரிகள், சினன் சில்க் சாரிகள்
சட்டீஸகர்க்
கோசா சில்க் சாரிகள்
குஜராத்
பட்டோலா சில்க் சாரிகள், குஜராத்தி கண்ணாடி வேலைப்பாடுகள் சாரிகள், டிசைனர் குர்த்தீஸ்
எண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங்கள்
எண்ணெய் வித்துக்கள் இந்தியாவில் எங்கெங்கு என்னென்ன விலையில் கிடைக்கிறது, எங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது, என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறும் இணையதளம். மேலும், உலகளவில் எண்ணெய்களுக்கு என்ன விலை கிடைக்கிறது, இறக்குமதி விலைகள் என்ன என்பதையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள் சால்வண்ட் எக்ஸ்டிராக்ட்ஸ் அசோஷியேஷன் ஆப் இந்தியா நிறுவனம்